search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து வேறுபாடு"

    • இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இதில் முரண்பட்டுள்ளார்.
    • சிவசேனா போல ஆம் ஆத்மி கட்சியும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் உள்ளது.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பாரதிய ஜனதா கட்சி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.

    ஆனால் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தலைவர்களில் பலர் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், 'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம்' என்று கூறி உள்ளனர்.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இதில் முரண்பட்டுள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டிருந்த 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை வரவேற்கிறோம். விரைவில் காஷ்மீரில் தேர்தல் வைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    சிவசேனா போல ஆம் ஆத்மி கட்சியும் காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் உள்ளது. அந்த கட்சி சார்பில் இதுவரை எந்த எதிர்ப்பு கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

    இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் உருவாகி உள்ளன. முக்கிய கொள்கை விஷயங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் திணறுவதை இது காட்டுவதாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் வருகிற 19-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    குறிப்பாக காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு தலைவர்களின் கூட்டறிக்கையாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தொகுதி பங்கீட்டை ஆரம்பிக்கவும் 19-ந் தேதி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • கருணாகரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் ஆசிரியர் கருணாகரன் (வயது 32). இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், மாணவர்கள் சக ஆசிரியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் உறுதியளித்தனர். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆசிரியரை விடுவிக்க கோரி மனு கொடுக்க விழுப்புரம் சென்றனர். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டார். மேலும், ஆசிரியரை விடுவிக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளி க்கு அனுப்பமாட்டோமென பெற்றோர்கள் கூறிவிட்டு அங்கிருந்து வந்தனர்.

    இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினார். இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். தவறான புகார் கொடுத்த பள்ளி ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து முன்கூட்டியே கல்வி துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கபடவில்லை என முறையான விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் புஷ்பராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுக்க சென்றனர். அவர்களிடம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோர் கூறியதாவது:-

    போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இனிமேல் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் தான் முடிவு தெரியும். நாங்கள் யாரும் அது பற்றி முடிவு செய்ய முடியாது. கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து கல்வி கற்க செய்யுங்கள் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த அவர்கள், கிராம பஞ்சாயத்தார் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் கலந்தாலோசித்தனர். இதில் வரும் 4-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது பா ர்த்துக் கொள்ளலாமெனவும் முடிவெடுத்தனர். இந்த முடிவினை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாக்கூர் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

    • திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
    • 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் வடலூர் சேராகுப்பத்தைச் சேர்ந்த ராஜி மகன் பாலகுரு (38) என்பவருக்கும் கடந்த 21-ம்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

    இதனால் பாலகுரு வரதட்சணையாக 20 பவுன் நகை 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சரண்யா பி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
    • முடிவு எடுப்பதற்காக 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா  திரவுபதி அம்மன் கோவில் தொடர்பாக இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள்புகழேந்தி (விக்கிரவாண்டி) டாக்ட ர்லட்சுமணன்(விழுப்புரம்) சிவக்குமார்(மயிலம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா -திரவுபதி அம்மன் க்கவில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. எனவே, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரிடமும் கருத்து க்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொது இடத்தினை பயன்படுத்திட அனைவருக்கும் உரிமை உண்டு, அதேப்போல் சமூக நீதி கடைப்பிடித்தும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதும் சட்ட விதிகளில் ஒன்றாகும்.

    பொதுவான ஊர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், இரு தரப்பினரும் தங்கள் பிரச்சனைகளை எவ்வாறு சுமூகமாக தீர்வு காணலாம் என அரசு வழிகாட்டுதலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஊர் பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து சுமூக முடிவு எடுப்பதற்காக 3நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்.ஜெயசந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், திண்டிவனம் சப்-கலெக்டர் க ட்டா ரவி தேஜா, விழுப்பு ரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்ச ந்திரன், கூடுத ல்போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டரின் நே ர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், விழுப்புரம் தாசில்தார்வேல்முருகன், மேல்பாதி கிராமபொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பண்ருட்டியில் திருமணமான 1 ஆண்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் மருவன் தெரு வை சேர்ந்தவர்பாலசண்முகம். அவரது மகன் இளங்குமார் (34) என்பவர் பூதம்பாடியைச் சேர்ந்த ராஜேஸ்வரிஎன்பவரை திருமணம் செய்து ஓர் ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் 7ம் தேதி நெய்வேலியில் நடை பெற்ற தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இளங்குமார் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது ஃபேன் கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய் துகொண்டார் இதுபற்றி தாயார் இளவரசி முத்தாண்டி குப்பம் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    • மனைவியை பிரிந்து வாழ்ந்த கொத்தனார் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தார்.
    • இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தோப்புபட்டி தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 42), கொத்தனார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கவுதம் (15) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி கணவரை பிரிந்து மாசிலாபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கோவையில் கட்டிடவேலைக்கு சென்று வந்த பாண்டியராஜ், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் கோவைக்கு செல்லாமல் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் மது குடித்து வந்தார். இதனை கண்ட அவரது தந்தை சண்முகவேல் கண்டித்தார்.

    நேற்று வீடு திரும்பாத பாண்டியராஜ், ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள கொண்டனேரி கண்மாய் அருகில் உள்ள பெரியார் சிலை பின்புறம் மது குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
    • ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை.
    • தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    தக்கலை, அக்.20-

    தக்கலை அருகே துரப்பு திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது36), இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு ரிஷி (10) மற்றும் ரிக்ஷானா (8) என 2 குழந்தைகள் உள்ளனர். மகன் 5-ம் வகுப்பும், மகள் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் வட்டம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவியும், குழந்தைகளும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தார். காணாததால் நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியையும், குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    ×